விசை தீறாமல் சுழல்கிறது
உலகம்!!!
புத்தன் தெரிகிறான்
புத்தனுக்கு தவத்தில் கனவு வருமா என்ன
அதுசெரி தவமும் காதல் தானே
அவள் உறங்க நான் கனவு காண்கிறேன்!
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
விரும்பும் புரட்சி பற்றி
எழுது
போலிப் புரட்சியாளர்கள் பற்றி
எழுது
முயங்கி நிற்கும் அழகு பற்றி
எழுது
இரட்டை வேடம் பற்றி
எழுது
விரும்பும் அன்பைப் பற்றி
எழுது
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி
எழுது
ஒன்று செய்
உன் கவிதையை
நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு